விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்ட கருவூலத்துறை பணிகள் குறித்து ஆணையர் ஆய்வு

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்ட கருவூலத்துறை பணிகள் குறித்து ஆணையர் ஆய்வு செய்தாா்.

Update: 2022-05-13 17:07 GMT

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட கருவூலத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையர் வெங்கடேஷ் தலைமை தாங்கி விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கருவூலத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.


மேலும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின் மூலம் அரசுத்துறையில் பணியாற்றும் அலுவலர்களுக்கும் மற்றும் பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்கும் முறை மற்றும் இதர பண பரிவர்த்தனை கணினி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதையும்,

 ஓய்வூதியதாரர்களுக்கான வாழ்நாள் நிலுவை ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், கூடுதல் ஓய்வூதியம், பண பரிவர்த்தனை குறித்தும் ஆய்வு செய்ததுடன் சிறந்த முறையில் பணியாற்றும்படி அலுவலர்களுக்கு கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையர் வெங்கடேஷ் அறிவுரை வழங்கினார்.


 இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மோகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், கருவூல மண்டல இணை இயக்குனர் முத்துராமன், மாவட்ட கருவூல அலுவலர்கள் விழுப்புரம் சித்ரா, கள்ளக்குறிச்சி இளங்கோபிரபு மற்றும் உதவி கணக்கு அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்