பெண்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி
காவேரிப்பாக்கத்தில் பெண்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி நடந்தது.
காவேரிப்பாக்கம்
காவேரிப்பாக்கத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் திட்ட பயிற்சி நடைபெற்றது. ஒன்றியக் குழு தலைவர் அனிதாகுப்புசாமி தலைமை தாங்கினார். மருத்துவர்கள் பிரசாந்த், கோகுலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை பராமரிப்புத் துறை உதவியாளர் முகுந்தராவ் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குனர் பாஸ்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது யதாவது; பெண்களை தொழில் முனைவோராக ஆக்குவதற்காக தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு 5 ஆடுகள் வழங்கப்பட உள்ளது. ஆடுகள் பராமரிப்பு செலவுக்காக ரூ.1,000 வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.
பேராசிரியர் ராஜேஷ்குமார் ஆடுகளை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து விளக்கினார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமணி, ஒன்றிய கவுன்சிலர் ஞானமணி அருளரசு, ஆய்வாளர்கள் ராசாத்தி, ராமசந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.