தூத்துக்குடியில் புகையிலை பொருட்கள் விற்ற 10 கடைகளுக்கு அபராதம்

தூத்துக்குடியில் புகையிலை பொருட்கள் விற்ற 10 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2022-05-13 15:51 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார குழுவினருடன் இணைந்து தூத்துக்குடியில் நேற்று சோதனை நடத்தினர்.
டாக்டர் வேணுகா, மாநகராட்சி நகர்நல அலுவலர் அருண்குமார், சுகாதார அலுவலர்கள் ஸ்டாலின், ராஜபாண்டி, ஹரிகணேஷ், மாப்பிளையூரணி ஊராட்சி சுகாதார ஆய்வாளர் வில்சன் ஆகியோர் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி, வ.உ.சி கல்லூரி ஆகிய கல்லூரிகளை சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள 50 கடைகளில் சோதனை நடத்தினர்.
அப்போது 10 கடைகளில் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள், குட்கா, பான்மசாலா, பிளாஸ்டிக் பைகள் இருந்தன. அவைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்தனர். 

மேலும் செய்திகள்