உளுந்தூர்பேட்டை அருகே பிளஸ்-2 மாணவிக்கு குழந்தை பிறந்தது

உளுந்தூர்பேட்டை அருகே பிளஸ்-2 மாணவிக்கு குழந்தை பிறந்தது. இதுதொடர்பாக சிறுவன் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-05-13 14:11 GMT
உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவரும், அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவனும், கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அப்போது மாணவியிடம் அந்த சிறுவன் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதில் அந்த மாணவி கர்ப்பமானதாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவி திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார். இதைபார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதைகண்ட அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்த புகாாின்பேரில் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்து, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்