மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்

மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்பட்டது

Update: 2022-05-13 13:35 GMT
பாவூர்சத்திரம்:
தென்காசி மாவட்ட மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள்கள் மற்றும் கார்கள் பாவூர்சத்திரத்தில் வென்னிமலை முருகன் கோவில் வளாகத்தில் வைத்து ஏலம் விடப்பட்டது. அரசுடமையாக்கப்பட்ட 71 மோட்டார் சைக்கிள்கள், 3 கார்கள் இந்த ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டன. மாவட்ட கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு கலிவரதன் முன்னிலையில் ஏலம் நடந்தது. இதில் தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். வாகனங்களை ஏலம் எடுப்பதற்கு கீழப்பாவூர், ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர் உள்பட பல பகுதிகளிலிருந்து ஏராளமானோர் வந்திருந்தனர்.
----

மேலும் செய்திகள்