ஈரோட்டில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

ஈரோட்டில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-05-12 22:15 GMT
ஈரோடு
ஈரோட்டில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். 
பாலியல் பலாத்காரம்
ஈரோடு மரப்பாலம் பகுதியை சேர்ந்தவர் பாபுராஜ் என்கிற பாபு (வயது 29). கூலி தொழிலாளி. இவா் ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியை மிரட்டி பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் கூறி உள்ளார்.
இதைத்தொடர்ந்து அவருடைய பெற்றோர் இதுபற்றி ஈரோடு சூரம்பட்டி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் பாபுவை பிடித்து விசாரணை நடத்தினர். 
பல்வேறு குற்ற வழக்குகள்
விசாரணையில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் போக்சோ, கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பாபுவை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பாபு மீது ஏற்கனவே ஈரோடு டவுன், மொடக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2020-ம் ஆண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தற்போது வெளியே வந்த பாபு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்