ஊஞ்சலூர் அருகே ஸ்கூட்டர் மீது கார் மோதல்; கல்லூரி மாணவர் பலி

ஊஞ்சலூர் அருகே ஸ்கூட்டர் மீது கார் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் பலி ஆனார்.

Update: 2022-05-12 20:58 GMT

ஊஞ்சலூர்ஊஞ்சலூர் அருகே ஸ்கூட்டர் மீது கார் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் பலி ஆனார்.

கல்லூரி மாணவர்

ஊஞ்சலூர் அருகில் வெங்கம்பூர் கல்வெட்டுப்பாளையத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரது மகன் மனோஜ்குமார் (வயது 21). இவர் ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.நேற்று முன்தினம் கல்லூரி முடிந்து தன்னுடைய நண்பரான மாணவர் ஸ்ரீதர் என்பவருடன் ஸ்கூட்டரில் வீட்டுக்கு வந்து உள்ளார். ஸ்கூட்டரை ஸ்ரீதர் ஓட்டினார். அவருக்கு பின்னால் மனோஜ்குமார் உட்கார்ந்திருந்தார். ஈரோடு- கரூர் ரோட்டில் ஊஞ்சலூரை அடுத்த கணபதிபாளையம் கால்நடை மருத்துவமனை அருகே வந்தபோது பின்னால் வந்த கார் ஒன்று ஸ்கூட்டரின் பின்புறத்தில் மோதியது.

சாவு

இந்த விபத்தில் ஸ்ரீதர், மனோஜ்குமார் ஆகியோர் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனே படுகாயம் அடைந்த 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே வரும் வழியில் மனோஜ்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஸ்ரீதர் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்