திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பள்ளிக்கூட மாணவி பாலியல் பலாத்காரம்; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக்கூறி பள்ளிக்கூட மாணவியை கர்ப்பமாக்கிய தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
ஊஞ்சலூர்
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக்கூறி பள்ளிக்கூட மாணவியை கர்ப்பமாக்கிய தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தொழிலாளி
ஊஞ்சலூர் அருகே உள்ள பனங்காட்டுப்புதூரை சேர்ந்தவர் கனகராஜ். இவருடைய மகன் தாமோதரன் (வயது 22). இவர் ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
ஊஞ்சலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது உடைய பிளஸ்-2 மாணவிக்கும், தாமோதரனுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கைது
இதைத்தொடர்ந்து மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக்கூறி தாமோதரன் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதுபற்றி அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறி உள்ளார்.
இதுகுறித்து மலையம்பாளையம் போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தமோதரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.