20 பஸ்களில் ஏர் ஹாரன்கள் பறிமுதல்
20 பஸ்களில் ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அரியலூர்,
அரியலூர் நகரில் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டு உள்ளதாக பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகர், வாகன ஆய்வாளர் சரவணபவன் மற்றும் ஊழியர்கள் அரியலூர் பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த பஸ்களில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் சில பஸ்களில் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, 20 பஸ்களில் பொருத்தப்பட்டு இருந்த ஏர் ஹாரன்களை ஊழியர்கள் அகற்றினர். மேலும், அதிக சப்தம் எழுப்பும் ஏர் ஹாரன்களை பயன்படுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.