மேலும் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது

மேலும் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது

Update: 2022-05-12 19:47 GMT
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா நெய்வேலி வடபாதி செட்டித்தெருவை சேர்ந்தவர் ராமக்கோனாரின் மகன் திருமேனி (45). இவர் மணல் கடத்தலில் தொடர்புடையவர் ஆவார். இதையடுத்து இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் பாப்பாநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன், குண்டர் சட்டத்தில் திருமேனியை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார். ஏற்கனவே மணல் கடத்தலில் தொடர்புடைய 3 பேர் நேற்று முன்தினம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்