அரூர்:
அரூர் அருகே எஸ்.பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் கிஷோர் (வயது 21). இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் நேற்று இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த அரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிஷோரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.