டியூசன் ஆசிரியர் தற்கொலை
மாரண்டஅள்ளியில் டியூசன் ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டார்.
பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த பெல்லுஅள்ளி கிராமத்தை சேர்ந்தவா் முனிராஜ் மகன் சிவப்பிரகாசம் (வயது 32). திருமணமாகாதவர். டியூசன் ஆசிரியரான இவர், மாலை நேரங்களில் அதே பகுதியில் உள்ள மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வந்தார். இதனிடையே கடந்த 1-ந் தேதி சிவப்பிரகாசம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது உடலை குடும்பத்தினர் போலீசாருக்கு தெரிவிக்காமல் எரித்து விட்டனர். தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலா் மாதப்பன் மாரண்டஅள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.