ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

பொம்மிடியில் ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-12 18:20 GMT
தர்மபுரி:
தர்மபுரி குடிமை பொருள் வழங்கல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணன் உத்தரவின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், ஏட்டுகள் வேணுகோபால், குமார் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் பாப்பிரெட்டிப்பட்டி- பொம்மிடி சாலையில் அண்ணாநகர் ஜங்ஷன் பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வேனில் தலா 50 கிலோ எடை கொண்ட 26 மூட்டை ரேஷன் அரிசியை கடத்திச் செல்வது தெரியவந்தது. அந்த வேன் மற்றும் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட கொட்டாளூர் பகுதியைச் சேர்ந்த மணி (வயது 27) என்பவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்