அன்புமணி ராமதாசுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்
தர்மபுரிக்கு நாளை (சனிக்கிழமை) வருகை தரும் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று பா.ம.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தர்மபுரி:
ஆலோசனை கூட்டம்
தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தர்மபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் பி.வி.செந்தில் வரவேற்று பேசினார். முன்னாள் எம்.பி.க்கள் செந்தில், பாரிமோகன், தமிழ்நாடு உழவர் பேரியக்கம் மாநில செயலாளர் இல.வேலுசாமி, பா.ம.க. மாநில துணைத்தலைவர் சாந்தமூர்த்தி, வன்னியர் சங்க மாநில செயலாளர் அரசாங்கம், இளைஞர் சங்க மாநில செயலாளர் முருகசாமி, மாவட்ட அமைப்புச் செயலாளர் சண்முகம், முன்னாள் மாவட்டச் செயலாளர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கிப் பேசினார். தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நாளை (சனிக்கிழமை) மதியம் 3 மணிக்கு தர்மபுரி டி.என்.சி.விஜய் மஹாலில் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் பாட்டாளி இளைஞர் சங்க மாநில தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து விளக்கிப் பேசுகிறார்.
சிறப்பான பாதுகாப்பு
முன்னதாக மதியம் 2 மணிக்கு தர்மபுரி குண்டலபட்டியில் மாவட்ட பா.ம.க. சார்பில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் முன்னாள் மாநில துணைப் பொதுச் செயலாளர் சரவணன், மாவட்ட தலைவர் செல்வகுமார், பென்னாகரம் ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், பசுமைத் தாயகம் மாநில துணைச் செயலாளர் மாது, மாவட்ட கவுன்சிலர்கள் மாது, சரவணன், இளைஞர் சங்க மாநில துணைச் செயலாளர் அன்பழகன், மாவட்ட நிர்வாகிகள் வணங்காமுடி, ராமலிங்கம், முரளி, பன்னீர்செல்வம், சிவக்குமார், முரளி, வீரமணி, காமராசு, சேட்டு, சுதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.