திருமயம் அரசு மருத்துவமனையில் செவிலியர் தின விழா கொண்டாட்டம்

செவிலியர் தின விழா கொண்டாட்டப்பட்டது.

Update: 2022-05-12 18:11 GMT
திருமயம்:
திருமயம் அரசு மருத்துவமனையில் செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது. இதைதொடர்ந்து மருத்துவமனையில் பொதுமக்கள் சார்பாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. பின்னர் அனைவருக்கும் செவிலியர்கள் இனிப்பு வழங்கினார்கள். இதையடுத்து செவிலியர்களுக்கு பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து மருத்துவமனையில் சுற்றியுள்ள இடங்களில் செவிலியர்கள் ஆர்வமுடன் மரக்கன்றுகள் நட்டனர். இதில் டாக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, கிருபாகரன், சமூக ஆர்வலர் பழனிவேலு மற்றும் மருத்துவமனை பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்