‘பேட்ஜ்’ அணிந்து பணியாற்றிய ஊழியர்கள்

பரமக்குடி கூட்டுறவு துணைப் பதிவாளர் அலுவலகத்தில் ‘பேட்ஜ்’ அணிந்து ஊழியர்கள் பணியாற்றினர்.

Update: 2022-05-12 18:09 GMT
பரமக்குடி, 

பரமக்குடியில் உள்ள கூட்டுறவு துணைப்பதிவாளர் அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்ட போராட்டங்கள் நடத்துவது குறித்த செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராஜமூர்த்தி முன்னிலை வகித்தார். பின்பு விகிதாச்சார விதிகளை தளர்த்தி தகுதியுள்ள அனைத்து இளநிலை ஆய்வாளர்களை முதுநிலை ஆய்வாளர் களாகவும் பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் ஆகியோரை இளநிலை உதவியாளர்களாகவும், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை 3 ஆகியோரை ஆய்வாளர்களாக பதவி உயர்வு செய்ய வேண்டும் என்றும் போதிய கால அவகாசமின்றி புள்ளிவிவரம் கூறுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி துணைப் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் ‘பேட்ஜ்’ அணிந்து பணி புரிந்தனர். அடுத்ததாக கோரிக்கையை வலியுறுத்தி 26-ந்தேதி மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு சிறப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் அடுத்த மாதம் 10-ந் தேதி ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தப்படுவதாகவும் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்