திருக்கோவிலூரில் சாரல் மழை

திருக்கோவிலூரில் சாரல் மழை பெய்தது.

Update: 2022-05-12 17:37 GMT
திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் பகுதியில் கடந்த 2 மாதமாக கடும் வெயில் அடித்து வந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தொடங்கியதால், வெயிலின் தாக்கம் நாளுக்குள் நாள் அதிகரித்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். வெயிலை தாங்கமுடியாமல் பலர் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசி வந்தது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.  இந்த நிலையில் நேற்று திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் சாரல் மழை பெய்தது இதனால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். 

மேலும் செய்திகள்