மாவட்ட செயலாளர் குமரகுருவுக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் வாழ்த்து
கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுருவுக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
திருக்கோவிலூர்,
கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக உளுந்தூர்பேட்டை முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுரு மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து திருக்கோவிலூர் முன்னாள் நகர செயலாளரும், முன்னாள் நகர கூட்டுறவு வங்கியின் தலைவருமான எஸ்.இளவரசன், முன்னாள் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் எஸ்.ரஜினிகாந்த் மற்றும் நகர நிர்வாகிகள் பலர் உளுந்தூர்பேட்டையில் மாவட்ட செலாளர் குமரகுருவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.