தேர் திருவிழாவில் சங்கிலி பறித்த 2 பெண்கள் கைது

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில்தேர் திருவிழாவில் சங்கிலி பறித்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-05-12 15:36 GMT
சோளிங்கர்

சோளிங்கர் யோக லட்சுமி நரசிம்மசுவாமி கோவில் பிரம்மோற்சவ தேர் திருவிழா  நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். தேர்திருவிழாவின்போது சுப்பாராவ் தெருவை சேர்ந்த ராணி கழுத்தில் இருந்த 3 பவுன் சங்கிலியை 2 பெண்கள் பறித்துள்ளனர். உடனே ராணி கூச்சலிட்டுள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி செல்ல முயன்ற இரண்டு பெண்களை கையும் களவுமாக பிடித்தனர். 

அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் திருச்சி சமயபுரம் அருகே உள்ள மணச்சநல்லூர் வாய்க்கால் மேட்டு தெரு பகுதியை சேர்ந்த சங்கீதா (வயது 32), பொன்னாத்தா என்கிற கவிதா (35) என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்