மந்திராலயா முன் ஒப்பந்ததாரர் மனைவியுடன் தற்கொலை முயற்சி- போலீசார் மீட்டனர்

மந்திராலயா முன் உடலில் மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு ஒப்பந்ததாரர் மனைவியுடன் தற்கொலைக்கு முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்.

Update: 2022-05-12 15:15 GMT
ஒப்பந்ததாரர் மனைவியுடன் தற்கொலைக்கு முயற்சி
மும்பை, 
  மந்திராலயா முன் உடலில் மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு ஒப்பந்ததாரர் மனைவியுடன் தற்கொலைக்கு முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். 
தற்கொலை முயற்சி
  மும்பை நரிமண் பாயின்ட் பகுதியில் உள்ள மராட்டிய அரசின் தலைமை செயலகமான மந்திராலயாவுக்கு வெளியே, ஒரு தம்பதி நின்று கொண்டிருந்தனர். அவர்கள் திடீரென தாங்கள் கொண்டு வந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். இதனைக்கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தம்பதியை மடக்கி பிடித்து காப்பாற்றினர். பின்னர் மரின்லைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். 
  போலீசார் தற்கொலைக்கு முயன்ற தம்பதியிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் நாந்தெட்டை சேர்ந்த ஒப்பந்ததாரான ராஜூ ஹெல்குடே மற்றும் அவரது மனைவி என தெரியவந்தது.
போலீசார் விசாரணை
  இவர் நிறைவு செய்த சாலை பணிக்காக, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தொகையை அனுமதிக்க முறையிட்டதாகவும், ஆனால், பணம் கிடைக்காததால் மந்திராலயாவில் மனைவியுடன் தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்தார். அவர்கள் தெரிவித்த காரணம் உண்மைதானா என்பது குறித்து விசாரணை நடத்திய பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். 
  அண்மை காலமாக மந்திராலயா முன்பு விவசாயிகள் உள்பட பலர் தற்கொலைக்கு முயன்று வருவதால், இதனை தடுக்க அங்கு 24 மணி நேரம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
----

மேலும் செய்திகள்