பஸ்சில் கடத்தி வந்த 15 கிலோ கஞ்சா பறிமுதல் 2 பெண்கள் கைது
திருப்பதியில் இருந்து பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த திருவண்ணாமலையை சேர்ந்த 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
காட்பாடி
திருப்பதியில் இருந்து பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த திருவண்ணாமலையை சேர்ந்த 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வாகன தணிக்கை
தமிழக -ஆந்திர மாநில எல்லையில் உள்ள கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார், மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீசார் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருப்பதியில் இருந்து திருச்சி செல்லும் அரசு பஸ் வந்தது. அதனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது இருக்கையின் அடியில் ஒரு மூட்டையில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கஞ்சாவை திருவண்ணாமலை சமுத்திரம் காலனியை சேர்ந்த கலைவாணி, முனியம்மாள் ஆகியோர் கடத்தி வந்தது தெரியவந்தது.
2 பெண்கள் கைது
அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். கைது செய்யப்பட்ட கலைவாணி மீது 35 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.