அரசு ஆஸ்பத்திரியில் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-05-12 14:44 GMT
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ ஊழியர்களுக்கு தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மருத்துவ அலுவலர் மதன்குமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவமனை துப்புரவு பணியாளர்களுக்கு தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் மற்றும் ராமமூர்த்தி தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர்.

மேலும் செய்திகள்