திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.27 லட்சம் வருவாய்

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.27 லட்சம் வருவாய் கிடைத்தது.

Update: 2022-05-12 14:31 GMT
திண்டுக்கல்:
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா நிறைவு பெற்றதும் உண்டியல் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி இன்று உண்டியல் திறப்பு நடந்தது. இதற்கு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு ஆய்வாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
இதில், பொது மற்றும் திருப்பணிக்கென வைக்கப்பட்டிருந்த 23 உண்டியல்கள் திறக்கப்பட்டன. இவற்றில் ரொக்கமாக ரூ.27 லட்சத்து 80 ஆயிரத்து 187 ரூபாய், 432 கிராம் தங்கம், ஆயிரத்து 698 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இந்த உண்டியல் திறப்பில் கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் சுபாஷினி, திருக்கோவில் பணியாளர்கள், திண்டுக்கல் சத்யசாய் மற்றும் ஆன்மிக சேவா சங்கத்தினர் ஆகியோர் ஈடுபட்டனர்.


மேலும் செய்திகள்