பள்ளி மாணவ- மாணவிகளுக்கான திறன் ஊக்க பயிற்சி

கலைத்திறனை ஊக்கப்படுத்த பள்ளி மாணவ- மாணவிகளுக்கான திறன் ஊக்க பயிற்சி 18-ந் தேதி நடக்கிறது.

Update: 2022-05-12 13:03 GMT
வேலூர்

சர்வதேச அருங்காட்சியக தினமான மே 18-ந் தேதியை முன்னிட்டு வேலூர் அரசு அருங்காட்சியகம் சார்பில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ -மாணவிகளுக்கு வருகிற 18-ந் தேதி திறன் ஊக்க பயிற்சி முகாம் வேலூர் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் நடத்தப்பட உள்ளது.

பள்ளி மாணவர்களின் கலைத்திறனை ஊக்கப்படுத்தும் வகையில் பயிற்சி முகாமில் பங்கேற்க உள்ள மாணவர்களுக்கு, அடிப்படை ஓவியம், வண்ண ஓவியம், ஓவியங்களின் வகைகள், பயனற்ற பொருட்களை கலைப்பொருட்களாக மாற்றுதல், வாழ்த்து அட்டை தயாரித்தல் உள்ளிட்ட திறன் ஊக்க பயிற்சி ஓவிய ஆசிரியர்களால் வழங்கப்பட உள்ளது. ஓவியத்தில் ஆர்வமுள்ள மாணவ- மாணவிகள் வருகிற 17-ந் தேதிக்குள் தங்களது பெயரை வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பெயரை பதிவு செய்த மாணவர்கள் மட்டுமே பயிற்சி முகாமில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்