தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை 89 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை 89 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை 89 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கொலை வழக்கு
ஓட்டப்பிடாரம் பாஞ்சாலங்குறிச்சி சிலோன் காலனியை சேர்ந்தவர் சிவபெருமாள். இவருடைய மகன் தங்ககுமார் (வயது 20). இவரை தூத்துக்குடியை சேர்ந்த முனியலட்சுமி என்பவரை கொலை செய்த வழக்கில் தென்பாகம் போலீசார் கைது செய்தனர்.
இதே போன்று பழையகாயல் ராமச்சந்திரபுரம் பகுதியை சேர்ந்த சேர்மபாண்டி மகன் முத்துப்பாண்டி (20) என்பவரை கொலை முயற்சி வழக்கில் ஆத்தூர் போலீசார் கைது செய்தனர்.
குண்டர் சட்டம்
இவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தங்ககுமார், முத்துபாண்டி ஆகிய 2 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர்.
நடப்பு ஆண்டில் இதுவரை போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 23 பேர் உட்பட 89 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த மாதத்தில் 30 நாட்களில் 30 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.