திருவண்ணாமலை வட்ட வழங்கல் அலுவலகத்தில் உதவி கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலை வட்ட வழங்கல் அலுவலகத்தில் உதவி கலெக்டர் வெற்றிவேல் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் வட்ட வழங்கல் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் காலை 11 மணி வரை திறக்கப்படாமல் இருந்து உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தில் நடந்த பயிற்சி வகுப்பு ஒன்றில் கலந்து கொண்ட திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேலிடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர், வட்ட வழங்கல் அலுவலகத்தை நேரில் சென்று பார்வையிட்டு திடீர் ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த வட்ட வழங்கல் அலுவலர் உள்ளிட்ட அலுவலர்களிடம் சரியான நேரத்தில் அலுவலகத்தை திறக்க வேண்டும். முகாம் ஏதேனும் சென்று இருந்தால் அது குறித்து அலுவலகம் முன்பு அறிவிப்பு பலகை வைக்க வேண்டும், என்றார்.
மேலும் ரேஷன் கார்டு பெற்று தருவதற்கு இடைதரகர்கள் சிலர் செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். பின்னர் அவர் இடைதரகர்கள் யாரேனும் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.