சொத்து வரி உயர்வை ரத்து செய்யக்கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் மனு
சொத்து வரி உயர்வை ரத்து செய்யக்கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுத்தனர்.
சிவகிரி:
இந்திய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் தமிழகத்தில் சொத்து வரி உயர்வை உயர்த்தும் தமிழக அரசின் முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி சிவகிரியில் மனு கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசோக்குமார் தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் நடராஜன், மாவட்ட குழு உறுப்பினர் சக்திவேல், ஒன்றிய குழு உறுப்பினர்கள் அமல்ராஜ், சுப்பிரமணியன், சிவசுப்பிரமணியன், கிளை செயலாளர் ரவிந்திரநாத் பாரதி உள்பட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தமிழக அரசின் சொத்து வரி உயர்வை ரத்து செய்யக்கோரி பேரூராட்சி தலைமை எழுத்தர் தங்கராஜிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.