மண்டையோடு எலும்புகளை தூக்கி வரும் நாய்கள்
மண்டையோடு எலும்புகளை தூக்கி வரும் நாய்கள்
திருப்பூர் இடுவம்பாளையம் சுடுகாட்டில் இருந்து மண்டையோடு, எலும்புகளை தெருநாய்கள் ஊருக்குள் தூக்கி வருவதால் பொதுமக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர்.
இடுவம்பாளையம் சுடுகாடு
திருப்பூர்-மங்கலம் சாலை இடுவம்பாளையம் பகுதியில் மின் வாரியம் செல்லும் சாலையில் சுடுகாடு அமைந்துள்ளது. இங்கு அப்பகுதியில் இறப்பவர்கள் உடலை பல சடங்குகள் செய்து குடும்பத்தினர் உறவினர்கள் அடக்கம் செய்து செல்கின்றனர். சுடுகாட்டில் சுற்றுச்சுவர், எரிமேடு போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. மேலும் இறப்பவர்கள் உடலை முறையாக 6 அடி தோண்டி அடக்கம் செய்யாமல் 3டிக்கு குறைவாகவே உடலை அடக்கம் செய்வதால் அப்பகுதியில் சுற்றி திரியும் தெருநாய்கள் குழியை தோண்டி உடலின் பாகங்களை ஊருக்குள் எடுத்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பல்வேறு பகுதிகளில் எலும்புத்துண்டுகள், மண்டையோடும் உள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலரும் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர். மேலும் உடல்களை முறையாக அடக்கம் செய்யாததால் நாய்கள் உடலை உள்ள எலும்புகளை எடுத்து வருவதோடு அப்பகுதியை சுற்றி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் தொற்று நோய்கள் பரவவும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் கவனத்தில் எடுத்து முறையாக சுடுகாட்டை பராமரித்து சுற்றுச்சுவர் எழுப்பி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அபவுட் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்.