லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது

லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-12 12:04 GMT
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி அலுவலகம் அருகே மீன் மார்க்கெட் பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது மீன் மார்க்கெட் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த தனவேந்திரன் (வயது 45), காத்தவராயன் (58), ஆகியோர் விற்றது தெரியவந்தது. 

போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து கட்டுக்கட்டாக லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.400-ஐ பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்