எம்.ஆர்.ஐ. ஸ்கேன் அறையில் நவ்நீத் ரானா புகைப்படம்- போலீசார் வழக்கு

எம்.ஆர்.ஐ. ஸ்கேன் அறையில் நவ்நீத் ரானாவை செல்போனில் புகைப்படம் எடுக்கப்பட்டதை தெரிந்த பாந்திரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-05-12 11:58 GMT
ஸ்கேன் அறையில் நவ்நீத் ரானா புகைப்படம்
மும்பை, 
  அமாரவதி எம்.பி. நவ்நீத் ரானா, அவரது கணவர் ரவி ரானா அனுமன் பஜனை விவகாரத்தில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கடந்த 5-ந் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். 6-ந் தேதி நவ்நீத் ரானா எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கும் படங்கள் அவரது சமூக வலைதள பக்கத்தில் பகிரப்பட்டது.
  எம்.ஆர்.ஐ. ஸ்கேன் அறையில் புகைப்படம் எடுக்க அனுமதித்தது குறித்து சிவசேனாவினர் லீலாவதி ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் நேரில் சென்று கேள்வி எழுப்பி இருந்தனர். மேலும் மாநகராட்சியும் இந்த விவகாரம் தொடர்பாக ஆஸ்பத்திரிக்கு நோட்டீஸ் அனுப்பியது. 
  இந்நிலையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் அறையில் புகைப்படம் எடுக்கப்பட்டது தொடர்பாக, லீலாவதி ஆஸ்பத்திரி செக்யூரிட்டி அதிகாரி அமித் காட் பாந்திரா போலீசில் புகார் அளித்தார். 
  போலீசார் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் அறையில் நவ்நீத் ரானாவை புகைப்படம் எடுத்த அடையாளம் தெரியாத நபர் மீது அத்துமீறி உள்ளே நுழைதல், மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
----

மேலும் செய்திகள்