சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம்- 2 வாலிபர்கள் கைது

சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-05-12 11:09 GMT
கோப்பு படம்
புனே,
  புனே மாவட்டம் பிம்பிரி சிஞ்ச்வாட் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி கடந்த 21-ந் தேதி மாவு ஆலைக்கு சென்றாள். அப்போது, அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சிறுமியை வழிமறித்து தனது 21 வயது நண்பரின் அறைக்கு அழைத்து சென்றார். அங்கு 2 பேரும் சேர்ந்து சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்தனர். 
  மேலும் இதுபற்றி வெளியே சொன்னால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடுத்தனர். இதனால் பயந்துபோன சிறுமி யாரிடமும் தெரிவிக்கவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்திய அவர்கள், கடந்த 9-ந்தேதி மீண்டும் மிரட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர். 
  இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகாரின்பேரில் சிஞ்ச்வாட் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.
---

மேலும் செய்திகள்