இறந்து கரைஒதுங்கிய அரியவகை ஆமை

இறந்து கரைஒதுங்கிய அரியவகை ஆமையை சுற்றுலா பயணிகள் பார்த்து சென்றனர்.

Update: 2022-05-11 17:57 GMT
ராமேசுவரம், 
ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடல் பகுதியில் ஏராளமான ஆமைகள் உள்ளன. சித்தாமை, பெருந்தலை ஆமை, பச்சை ஆமை உள்ளிட்ட 5 வகையான ஆமைகள் உள்ளன. ராமேசுவரம் தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் கடற்கரை அருகே நேற்று இறந்த நிலையில் ஆமை ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது. இந்த ஆமையானது சுமார் 50 கிலோவுக்கு மேல் எடை இருக்கும் என்றும் ஆமையின் இடது புறம் துடுப்பு பகுதியில் அடிபட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. அப்போது தனுஷ்கோடி கடல் பகுதியில் கடல் சீற்றம் மற்றும் நீரோட்டத்தின் வேகம் அதிகமாக இருந்ததால் கடலில் நீந்தும்போது இந்த ஆமை பாறைகளில் மோதி அடிபட்டு தொடர்ந்து நீந்த முடியாமல் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. தனுஷ்கோடி கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிக் கிடக்கும் ஆமையை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

மேலும் செய்திகள்