தேசூர் அருகே கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

தேசூர் அருகே கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-05-10 18:03 GMT
சேத்துப்பட்டு

தேசூர் அருகே கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் அரியம்பூண்டி கிராமத்தை சேர்ந்த சங்கர் (வயது 37). கூலி வேலை செய்து வருகிறார் இவருக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர் சங்கர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். பல்வேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சை குணமாகாததால் பூச்சி மருந்தை குடித்து விட்டார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார் இது குறித்து அவரது மனைவி தேசூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்