7 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்

வேலூர் மாவட்டத்தில் 7 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-05-10 17:37 GMT
வேலூர்

பேரணாம்பட்டு துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த வெங்கடேசன் பதவி உயர்வு பெற்று கே.வி.குப்பத்துக்கு வட்டாரவளர்ச்சி அலுவலராகவும் (வருவாய் ஊராட்சி), அங்கு பணியாற்றி வந்த கோபி அங்கேயே கிராம ஊராட்சிக்கும், காட்பாடியில் பணியாற்றி வந்த நந்தகுமார் ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலக கண்காணிப்பாளராகவும், அங்கு பணியாற்றி வந்த ஸ்வர்ணலதா மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்துக்கும் (நிர்வாகம்), அங்கு பணியாற்றி வந்த மனோகரன் காட்பாடிக்கும் (வருவாய் ஊராட்சி), அங்கு பணியாற்றி வந்த ரகு அங்கேயே கிராம ஊராட்சிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

அணைக்கட்டில் பணியாற்றி வந்த (கிராம ஊராட்சி) சுதாகரன் அங்கேயே வருவாய் ஊராட்சிக்கும், அங்கு பணியாற்றி வந்த கனகராஜ் கிராம ஊராட்சிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல குடியாத்தத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த கார்த்திகேயன் பதவி உயர்வு பெற்று குடியாத்தம் வருவாய் ஊராட்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலராக மாற்றப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பிறப்பித்துள்ளார்.

மேலும் செய்திகள்