மயிலத்தில் பஸ்சில் பெண்ணிடம் 24½ பவுன் நகை திருட்டு

மயிலத்தில் பஸ்சில் பெண்ணிடம் 24½ பவுன் நகையை மா்ம நபா் திருடி சென்றுவிட்டனா்.

Update: 2022-05-10 17:36 GMT

மயிலம், 

பெரம்பலூர் அடுத்த மேரிபுரம் பகுதியை சேர்ந்தவர் சத்திய தேவன் மனைவி ஜோதி (வயது 63). சென்னையில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றிருந்த அவர், அங்கிருந்து நேற்று முன்தினம்  அரசு பஸ்சில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார். 

 அந்த பஸ், மயிலம் அடுத்த பாதிராப்புலியூர் என்ற இடத்தில் உள்ள பயண வழி உணவகத்தில் நிறுத்தப்பட்டது. அப்போது ஜோதி பஸ்சில் இருந்து இறங்கி, அங்குள்ள கடையில் பொருட்கள் வாங்கி உள்ளார். 

பின்னர் பஸ்சில் ஏறிய ஜோதி, தனது பையை பார்த்த போது அதில் இருந்த 24½ பவுன் நகையை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து அவர் மயிலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்