வேதாரண்யத்தில் கடல் சீற்றம்

வேதாரண்யத்தில் கடல் சீற்றமாக காணப்பட்டது.

Update: 2022-05-10 17:25 GMT
வேதாரண்யம்:
வங்கக்கடலில் அசானி புயல் மையம் கொண்டு உள்ளதால் வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத்துறை, மணியன் தீவு, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் ஆகிய மீனவ கிராமங்களில் நேற்று மாலை கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் கடற்கரையில் இருந்து கடல்நீர் 100 முதல் 200 மீட்டர் வரை வெளியேறியது. 200 மீட்டர் தூரம் கடல் நீர் வெளியேறியதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். அசானி புயல் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததால் பைபர் படகில் சென்று மீன் பிடிக்கும் 5 ஆயிரம் மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. கடல் நீர் 200 மீட்டர் தூரம் வெளியேறியதால் மீனவர்கள் தங்கள் பைபர் படகுகளை கரையிலில் இருந்து வெகு தூரம் தள்ளி நிறுத்தி வைத்திருந்தனர். மீன்பிடிக்க செல்லாததால் மீனவர்கள் தங்களது வலைகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். கடல் சீற்றம் தணிந்து மீன்பிடிக்கச் செல்ல இன்னும் ஓரிரு நாள் ஆகும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்