கூடலூரில் பாம்புகளை கொன்ற தொழிலாளி கைது

கூடலூரில் பாம்புகளை கொன்ற தொழிலாளி கைது

Update: 2022-05-10 15:19 GMT
கூடலூர்

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட நடு கூடலூர் பகுதியில் சுருக்குவலை விரித்து பாம்புகளும் வேட்டையாடிய தாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து வனச்சரகர் கணேசன் தலைமையில் வனவர் சுபேத்குமார் உள்ளிட்ட வனத்துறையினர் விரைந்து சென்று அப்பகுதியில் ஆய்வு நடத்தினர். அப்போது 2 பாம்புகள் சுருக்கு வலையில் சிக்கி இறந்து கிடப்பதை கண்டனர். இதைத்தொடர்ந்து கூடலூர் இதைத்தொடர்ந்து கூடலூர் வனத்துறையினர் நடுகூடலூரை சேர்ந்த பாபு (வயது 68) மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, தகவலின் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது வன விலங்குகளை வேட்டையாடும் வகையில் சுருக்கு வலைகள் பொருத்தப்பட்டிருந்தது. மேலும் அதில் இரண்டு பாம்புகள் சிக்கி இறந்து கிடந்ததால் வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்