நீட் தேர்வு எழுத 2 மாணவிகளுக்கு ஆதரவற்றவர் சான்றிதழ்- அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

ஆதரவற்றோர் ஆசிரமம் சார்பில் மும்பை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் சான்றிதழை வழங்க அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு அளித்துள்ளது.

Update: 2022-05-10 15:16 GMT
கோப்பு படம்
மும்பை, 
  மும்பையை சேர்ந்த ஆதரவற்றோர் ஆசிரமம் சார்பில், மும்பை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனுவில், "ஆசிரமத்தை சேர்ந்த 2 மாணவிகள் நீட் தேர்வு எழுதுவதற்காக மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அலுவலகத்தில் ‘ஆதரவற்றவர்' என்பதற்கான சான்றிதழ் கேட்டு கடந்த 2020-ம் ஆண்டு நவம்பரில் விண்ணப்பித்தனர். பல முறை அலுவலகத்திற்கு அலைந்த பிறகும், 2 மாணவிகளுக்கும் ‘ஆதரவற்றவர்' என்பதற்கான சான்றிதழ் வழங்கப்படவில்லை. 
  எனவே அந்த மாணவிகளுக்கு சான்றிதழை வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டு இருந்தது. 
  இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ரேவதி மோகிதே, மாதவ் ஜாம்தார் அடங்கிய அமர்வு முன் நடந்தது. அப்போது அரசு தரப்பில், மாணவிகள் மனுவில் தவறுகள் இருந்ததாக கூறப்பட்டது. எனினும், இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் 2 மாணவிகளுக்கும் ஒரு வாரத்தில் ‘ஆதரவற்றவர்' என்பதற்கான சான்றிதழை வழங்க அரசுக்கு உத்தரவிட்டனர்.
-----

மேலும் செய்திகள்