குன்னூர்- மேட்டுப்பாளையம் ெரயில் பாதையில் சரக்கு ரெயில் என்ஜினில் திடீர் தீ விபத்து

குன்னூர்-மேட்டுப்பாளையம் ெரயில் பாதையில் சென்ற சரக்கு ரெயில் என்ஜினில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2022-05-10 15:07 GMT
குன்னூர்

குன்னூர்-மேட்டுப்பாளையம் ெரயில் பாதையில் சென்ற சரக்கு ரெயில் என்ஜினில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

சரக்கு ரெயில் 

குன்னூர்- மேட்டுப்பாளையம் மலை ரெயில் பாதை மலைகளை குடைந்து குகைகள் வழியாக மலை ரெயில் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மலை ரெயிலின் பாதுகாப்பு கருதி பல் சக்கர தண்டவாளம் கல்லார் முதல் குன்னூர் வரை போடப்பட்டுள்ளது. குன்னூர்-மேட்டுப்பாளையம் மற்றும் மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே நீராவி பர்னஸ் ஆயில் என்ஜின் மூலமாக ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக குன்னூர்-மேட்டுப்பாளையம் ரெயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 
இந்த நிலையில் மேட்டுப்பாளையத்திலிருந்து பராமரிப்பு பணிக்காக ஜல்லிகற்களை ஏற்றிக் கொண்டு சரக்கு ரெயில் ஒன்று குன்னூரை நோக்கி சென்று கொண்டு இருந்தது. 

தீ விபத்து

ரெயில் குன்னூர்- மேட்டுப்பாளையம் ரெயில் பாதையில் மரப்பாலம் அருகே வந்த போது ரெயில் என்ஜினில் திடீரென எதிர்பாராத விதமாக தீ பிடித்தது. உடனே என்ஜின் டிரைவர் மற்றும் உதவி டிரைவர்கள் நடுகாட்டில் மலை ரெயிலை நிறுத்தி தீயணைப்பு கருவியை கொண்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில் என்ஜினிலிருந்த டிரைவர் மற்றும் உதவி டிரைவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தீ அணைக்கப்பட்ட பிறகு சரக்கு ரெயில் மீண்டும் குன்னூர் வராமல் ஹில் குரோவ் ரெயில் நீலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேட்டுப்பாளையம் கொண்டு செல்லப்பட்டது. என்ஜின் டிரைவர்கள் தக்க நேரத்தில் சாதுர்யமாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மேலும் செய்திகள்