காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் 14-ந் தேதி முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

காஞ்சீபுரம் மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2022-05-10 14:27 GMT
காஞ்சீபுரம் மாவட்ட முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் முன்னாள் படை வீரர்களுக்கான தொழில் முனைவோர் (சுயதொழில் வேலைவாய்ப்பு) கருத்தரங்கு கூட்டம் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையில் வருகிற 14-ந் தேதி சனிக்கிழமை 11 மணிக்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நடைபெறவுள்ளது. கருத்தரங்கம் நிகழ்ச்சியின் போது முன்னாள் படைவீரர்களுக்கான சுய வேலைவாய்ப்பு கடன் உதவித்திட்டங்கள் மற்றும் மறு வேலைவாய்ப்பு பயிற்சிகள் குறித்து விளக்கவுரை நிகழ்த்தப்படவுள்ளது.

எனவே, முன்னாள் படைவீரர் சிறப்புக் குறை தீர்வு நாள் கூட்டம் மற்றும் தொழில் முனைவோர் கருத்தரங்கு நிகழ்ச்சியின் போது முன்னாள் படைவீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களைச் சார்ந்த விதவையர்கள் பெருமளவில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்