கூடுதல் ஆட்சியர் திடீர் ஆய்வு
செம்பட்டி பஸ் நிலையத்தில் கூடுதல் ஆட்சியர் திடீரென்று ஆய்வு செய்தார்.
செம்பட்டி:
நிலக்கோட்டை ஒன்றியம், பச்சமலையான்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட செம்பட்டியில் பஸ் நிலையம் உள்ளது. இங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை என புகார் வந்தது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்ட கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார் திடீரென்று செம்பட்டி பஸ்நிலையத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளதா? என, பார்வையிட்டார். அதேபோல், பஸ் நிலையத்தில் மின் விளக்குகள் எரிகிறதா? என அதிகாரிகளிடம் கேட்டார். பஸ்நிலையத்தில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின் போது, பச்சமலையான்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் காளிதாஸ், நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணவதி, திருமலைசாமி, ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தட்சிணாமூர்த்தி, ஏழுமலையான், பச்சமலையான்கோட்டை ஊராட்சி செயலர் ஜெயகணேஷ் மற்றும் அதிகாரிகள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.