நடுவிற்பட்டியில் பால்குடத்துடன் பக்தர்கள் ஊர்வலம்

நடுவிற்பட்டி தேவி காளியம்மன் கோவில் பொங்கல் கொடைவிழாவை முன்னிட்டு பால்குடத்துடன் பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.

Update: 2022-05-10 13:25 GMT
எட்டயபுரம்:
எட்டயபுரம் நடுவிற்பட்டி தேவி காளியம்மன் கோவில் பொங்கல் கொடை விழா நடந்தது. இதை முன்னிட்டு கடந்த மாதம் 29-ந் தேதி வடக்கத்தி அம்மனுக்கு கஞ்சி காய்ச்சி ஊற்றுதல் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கடந்த 3-ந் தேதி இரவு முளைப்பாரி விதை விதைத்து, கும்மிப்பாட்டு பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று கோவிலில் கொடை விழா நடந்தது. இதையொட்டி, விரதமிருந்த பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி ஆகியவற்றை எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பகலில் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு முளைப்பாரி ஊர்வலமும், இரவு 7 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.

மேலும் செய்திகள்