ஜூன், ஜூலை மாதங்களில் கொரோனா அதிகரிக்கும் - சுகாதார மந்திரி

மராட்டியத்தில் வருகிற ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று சுகாதார மந்திரி கணிப்பு

Update: 2022-05-10 12:15 GMT
ஜூன், ஜூலையில் கொரோனா அதிகரிக்கும்
மும்பை, 
  நாட்டில் சமீப நாட்களாக கொரோனா தொற்று மெல்ல உயர்ந்து வருகிறது. மராட்டியத்திலும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதார மந்திரி ராஜேஷ் தோபே நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
  மராட்டியத்தில் வருகிற ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த நோய் தொற்று பரவுவதை தடுக்க, தடுப்பூசி போடும் பணியை விரைவுப்படுத்துவதே சிறந்த வழியாகும். 
  எனவே முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. மற்ற பிரிவினர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடுவதற்காக மத்திய அரசிடம் நிதி உதவி கோரப்பட்டு உள்ளது.  இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்