எவரெஸ்ட் மலையேற்றத்திற்கு சென்ற பெண் டாக்டர் திடீர் சாவு
மும்பை கோரேகாவ் பகுதியை சேர்ந்த பெண் டாக்டர் பிரட்னியா சாமந்த். உலகிலேயே மிகவும் உயரமான எவரெஸ்ட் மலையேற்ற பயிற்சிக்காக சென்ற நிலையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
மும்பை,
மும்பை கோரேகாவ் பகுதியை சேர்ந்த பெண் டாக்டர் பிரட்னியா சாமந்த்(வயது 52). மலையேற்ற பயிற்சியில் விருப்பம் கொண்ட இவர், உலகிலேயே மிகவும் உயரமான எவரெஸ்ட் மலையேற்ற பயிற்சிக்காக நேபாள நாட்டிற்கு தனது குடும்ப நண்பர்களுடன் சென்றார்.
அங்கு எவரெஸ்ட் மலை அடிவாரத்தில் முகாமிட்டு தங்கி இருந்தபோது, டாக்டர் பிரட்னியா சாமந்த்திற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
அங்கிருந்த டாக்டர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில், மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் விமானம் மூலம் மும்பை கொண்டுவரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
-----