தெலுங்கானா மாநிலத்தில் இருந்து ரெயில் மூலம் 3,500 டன் அரிசி ஈரோட்டிற்கு வந்தது
தெலுங்கானா மாநிலத்தில் இருந்து ரெயில் மூலம் 3,500 டன் அரிசி ஈரோட்டிற்கு வந்தது.
ஈரோடு
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், பொது வினியோக திட்டத்திற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து நெல், அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்ட பொது வினியோக திட்டத்திற்காக, தெலுங்கானா மாநிலம் கரீம் பகுதியில் 3 ஆயிரத்து 500 டன் புழுங்கல் அரிசி கொள்முதல் செய்யப்பட்டது.
இந்த அரிசி மூட்டைகள் தெலுங்கானாவில் இருந்து 58 பெட்டிகள் கொண்ட தனி சரக்கு ரெயிலில் மூலம் நேற்று காலை ஈரோடு ரெயில்வே பணிமனைக்கு நேற்று வந்தடைந்தது. இதைத்தொடர்ந்து ரெயிலில் வந்த அரிசி மூட்டைகளை தொழிலாளர்கள் இறக்கி லாரிகளில் ஏற்றினர். இதைத்தொடர்ந்து அரிசி மூட்டைகள் ஈரோட்டில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.