குழந்தை பிறந்தநாளை கொண்டாடததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பெங்களூருவில் குழந்தையின் பிறந்தநாளை கொண்டாடததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பெங்களூரு:
பெங்களூரு கனகபுரா ரோடு கிரிகவுடன தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீகண்டா. இவரது மனைவி தேஜஸ்வினி (வயது 35). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், நேற்று முன்தினம் காலையில் தேஜஸ்வினி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீஸ் விசாரணையில், கடந்த 6-ந் தேதி இந்த தம்பதியின் ஆண் குழந்தைக்கு 2-வது பிறந்தநாள் விழா ஆகும். தனது மகனின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட வேண்டும் என்று கணவரிடம் தேஜஸ்வினி கூறியுள்ளார். ஆனால் கோழி பண்ணை வைத்து நடத்தியதில் ஸ்ரீகண்டாவுக்கு நஷ்டம் ஏற்பட்டு இருந்ததால், அவருக்கு குழந்தையின் பிறந்தநாளை கொண்டாட விருப்பம் இல்லாமல் மைசூருவுக்கு சென்றிருந்தார்.
இதனால் மனம் உடைந்த தேஜஸ்வினி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து பெங்களூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.