சரக்கு ரெயிலில் குமாிக்கு 1250 டன் ரேஷன் அரிசி வந்தது
தஞ்சாவூரில் இருந்து குமாிக்கு சரக்கு ரெயிலில் 1250 டன் ரேஷன் அரிசி வந்தது
நாகர்கோவில்:
தஞ்சாவூரில் இருந்து குமாிக்கு சரக்கு ரெயிலில் 1,250 டன் ரேஷன் அரிசி வந்தது
தஞ்சாவூரில் இருந்து குமரி மாவட்டத்துக்கு 1,250 டன் ரேஷன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது. அந்த அரிசி சரக்கு ரெயில் வேகன்கள் மூலமாக கொண்டு வரப்பட்டன. மொத்தம் 22 வேகன்களில் வந்த அரிசி நேற்று நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் அந்த வேகன்களில் இருந்து லாரியில் அரிசி மூடைகள் ஏற்றப்பட்டு, அரசின் உணவு கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டது.