மதுரை மத்திய சிறையில் கைதிகள் திடீர் மோதல்; 2 பேர் காயம்

மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2022-05-09 20:22 GMT
மதுரை
மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் காயம் அடைந்தனர்.
சிறையில் மோதல்
மதுரை மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 1500-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். 
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த தினேஷ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த நிதிஷ்குமார், பிரகாஷ்ராஜ் ஆகியோர் வழக்கு ஒன்றில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
சம்பவத்தன்று இவர்கள் சிறையில் உள்ள திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த செய்யது இப்ராஹிம் என்பவரிடம் கஞ்சா கேட்டதாக கூறப்படுகிறது. அதில் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு இருதரப்பாக பிரிந்து பயங்கரமாக மோதிக் கொண்டனர்.
2 பேர் படுகாயம்
இந்த மோதலில் செய்யது இப்ராஹிம் மற்றும் தினேசுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு சிறைக்காவலர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் இருதரப்பினரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். காயம் அடைந்த 2 பேரும் சிறை வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரை மத்திய சிறையில் கஞ்சா விவகாரத்தில் இருதரப்பாக கைதிகள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்