அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 1.1.2022 முதல் 3 சதவீத அகவிலைப்படி உயர்வை ரொக்கமாக வழங்க வேண்டும். மறு உத்தரவு வரும்வரை முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈடு செய்யும் விடுப்பினை ஒப்படைத்து பணம் பெறும் உரிமையை மீண்டும் வழங்க வேண்டும்.
தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது.