மதுக்கடை திறக்க தடை விதிக்க வேண்டும்

மதுக்கடை திறக்க தடை விதிக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

Update: 2022-05-09 19:54 GMT
விருதுநகர், 
மதுக்கடை திறக்க தடை விதிக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. 
 டாஸ்மாக் கடை 
விருதுநகர் நகராட்சி 15-வது வார்டு பகுதியில் உள்ள இனிமைநகர் பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
 எங்கள் பகுதியில் 150 வீடுகளுக்கு மேல் உள்ளது. இதன் அருகில் அரசு மேல்நிலைப்பள்ளி, தனியார் நூற்றாண்டு விழா மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, செவிலியர் பயிற்சிக்கல்லூரி ஆகியவை இயங்குகின்றன. தற்போது இதற்கு மத்தியில் டாஸ்மாக் கடை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே தாங்கள் பொதுமக்கள் நலன் கருதி இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைவதை தடுக்க வேண்டும். 
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இலவச பட்டா 
அருப்புக்கோட்டை திருநகரம் பகுதியில் வசிக்கும் அருந்ததியர் சமுதாய மக்கள் தமிழக அரசு புறம்போக்கு நிலங்களில் ஆதிதிராவிட நலத்துறை மூலம் இலவச பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி கோரியுள்ளனர். 
அருப்புக்கோட்டை தாலுகா தும்மக்குண்டு கிராமத்தில் ஆதிதிராவிடர் சமுதாயத்தினர் வசிக்கும் பகுதியில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லாத நிலையில் சிரமப்படும் நிலை உள்ளதால் அடிப்படை வசதி செய்து தரக்கோரி கலெக்டரிடம் அப்பகுதி மக்கள் மனு கொடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்